பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு பிரான்சின் டிரோம் பகுதியில் கொரோனாவிற்கு பின் வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து மாணவர்கள், உணவகங்கள் நடத்துபவர்களை சந்தித்து கேட்டு அறிந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார்.
அப்போது ஒரு இடத்தில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மேக்ரான் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு வீரர்கள் அந்த நபரை கீழே தள்ளினர். இதனிடையே மேக்ரானை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.