தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

discharged omicron firstperson
By Irumporai Dec 23, 2021 12:07 PM GMT
Report

தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது

இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பாக இருந்தது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 57 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்