“ரகசிய பேரம் பேசிய ஓபிஎஸ்” - நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேச்சு
ஓ.பன்னீர்செல்வம் ரகசிய பேரம் பேசியதாக நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
சசிகலாவுடன் பேரம்
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நத்தம் விஸ்வநாதன் நாம் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தற்போது நம் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார்.
தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்சை நான் மதிக்கிறேன் ஓபிஎஸ்-க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வெறி பிடித்தது போல உள்ளார்.

கட்சியையும் காட்டி கொடுத்து விட்டார். ஓபிஎஸ் துரோகி சட்டப்படி இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆவார். இபிஎஸ் அணியில் உள்ள யாரையும் ஓபிஎஸ் அணிக்கு போக விடாதீர்கள்.
சசிகலா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதால் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.
சசிகலா மீண்டும் ஓபிஎஸ்சை முதலமைச்சர் ஆக்கிறேன் என்று சொன்ன உடன் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இவர் சசிகலாவுடன் ரகசிய பேரம் பேசியதாக தெரிவித்தார். சட்டமன்றத்தில் கருணாநிதியை பாராட்டி பேசுகிறார். என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil