ஒரே 'லாட்டரி' - கேரள பெண்ணுக்கு வெளிநாட்டுல அடிச்ச மெகா ஜாக்பாட்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அபுதாபி லாட்டரி குலுக்கலில், கோடிக்கணக்கான ரூபாய் பரிசுத் தொகையாக கிடைத்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லீனா ஜலால்.
இவர் ஐக்கிய அரபு அமீரக நாட்டின், தலைநகரான அபுதாபியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில், மனித வள வல்லுனராக பணியாற்றி வருகிறார். வார வாரம் நடைபெறும் 'Big Ticket' என்னும் லாட்டரி குலுக்கலில், லாட்டரி டிக்கெட் ஒன்றை லீனா வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி, இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு, குலுக்கல் முறையில், பரிசு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 22 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் 44 கோடியே 75 லட்சம்) பரிசு தொகை விழுந்துள்ளது.
இந்தச் செய்தியைக் கேட்டதும், அவர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். தனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை 10 பேருடன் பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளார். பரிசுத் தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக கூறியுள்ளார். அபு தாபியில் மிகப் பெரிய பரிசுத் தொகையை வென்ற லீனா ஜலாலுக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். \