சுற்றுலாவுக்கு போன இடத்தில் மலையில் இருந்து குதித்த மூதாட்டி - சடலமாக மீட்பு
தொட்டபெட்டா மலை உச்சியில் இருந்து குதித்து 62 வயது மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார்.
திடீரென குதித்த பெண்
நீலகிரி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமானது உதகை தொட்டபெட்டா சிகரம் இங்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லீலாவதி என்ற 63 வயது பெண் சுற்றுலா பயணிகளின் கண் முன்னே தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள சுமார் 500 பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் உதவியுடன் 500 அடி பள்ளத்தில் விழுந்த லீலாவதி சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.