சிறையில் என்னிடம் ஒரு கைதி ஓரின தொந்தரவு கொடுத்தார்... - போரிஸ் பெக்கர் உருக்கம்...!

Tennis
By Nandhini 2 மாதங்கள் முன்

சிறையில் இருந்த என்னிடம் ஒரு கைதி எனக்கு ஓரின தொந்தரவு கொடுத்தார் என்று சிறைவாசம் குறித்து முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

வரி ஏய்ப்பு புகார்

முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் (54). இவர் ஜெர்மனியின் முன்னாள் டென்னிஸ் வீரரான இவர் 3 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். லண்டனில் வசித்து வந்த போரிஸ் பெக்கர் கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதன் பிறகு, கடந்த 2017ம் ஆண்டு, ஒரு தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கி அதை திருப்பி செலுத்ததால் தன்னை திவாலானவராக அறிவித்தார் பெக்கர். மேலும், பெக்கர் தன் வங்கி கணக்கிலிருந்து பலருக்கு நிறைய பணம் அனுப்பினார். அவரது சொத்துகளை மறைத்து ஏமாற்றினார். இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டது.

போரிஸ் பெக்கர் விடுதலை

இதனையடுத்து லண்டன் கோர்ட் போரிஸ் பெக்கருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. திவால் வழக்கு என்பதால் தண்டனை காலம் குறைக்கப்பட்டு, சில மாதங்கள் பெக்கர் சிறையில் இருந்தார். கடந்த வாரம் போரிஸ் பெக்கர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் அவர் தனது தாய்நாடான ஜெர்மனுக்கு சென்றார்.

the-number-one-tennis-player-boris-becker

போரிஸ் பெக்கரின் உருக்கமான பேச்சு

இந்நிலையில், தற்போது சிறை அனுபவத்தை குறித்து போரிஸ் பெக்கர் உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

சிறையில் நான் போரிஸ் பெக்கரே கிடையாது. கைதிக்குரிய நம்பரை வைத்து தான் என்னை அழைப்பார்கள்.

கொலை வழக்கில் 25 ஆண்டு தண்டனை பெற்ற ஜான் என்பவர் என்னுடன் சிறையில் இருந்தார். என்னைப் பற்றி அறிந்த அவர் என்னிடம் இருக்கும் பணத்தை தராவிட்டால் என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால், பயந்து நான் சத்தம் போட்டு கத்தினேன். என் சத்தத்தை கேட்டு சக கைதிகள், ஊழியர்கள் ஓடி வந்து என்னை அவரிடமிருந்து காப்பாற்றினர்.

அதேபோல், சிறையில் இன்னொருவர் என்னிடம் ஓரின தொந்தரவு கொடுத்தார். இப்படி பல மோசமான அனுபவங்களை நான் சிறையில் சந்தித்தேன். சிறையிலிருந்தபோது நான் புகைப் பிடிக்கவில்லை. மதுபானம் அருந்தவில்லை.

முதல்முறையாக பசி என்றால் என்ன என்பதை அங்கு உணர்ந்தேன். இதனால் எனது உடல் ஆரோக்கியம் ஏற்பட்டது. மொத்தத்தில், இந்த சிறை வாசத்தில் இருந்து கடினமான பாடத்தை நான் கற்றுக் கொண்டேன்' என்றார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.