கடும் நெருக்கடியில் இலங்கை : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ராமேஸ்வரம் வருகை , மாறுமா சூழல் ?
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார குறைப்பாடு காரணமாக. பொதுமக்கள் வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை,வின்னை முட்டும் அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் உள்ள குடி மக்கள் விதிக்கு இறங்கி ஆளும் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் , இலங்கையில் குடிமக்களாக வாழும் நம் தமிழ் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடியை அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தற்போது இலங்கையை சேர்ந்த 2 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சிரமப்படும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கடந்த 29ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி கொடுத்துள்ளது மத்திய அரசு.
ஆனால், இந்த உதவிகள் எல்லாம் அங்கு உள்ள மக்களின் வயிற்றை நிரப்புமா என்பது கேள்வி குறிதான் ? அங்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே அங்கு உள்ள குடிமக்களின் கோரிக்கையாக உள்ளது . இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏறப்டுமா அங்கு விடியல் மலருமா ? அதற்கான பதிலை இனி வரும் காலங்கள் தான் கூற வேண்டும் .