‘’ செல்ல மழையே, முத்து மழையே ‘’ : அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை - வானிலை மையம்

By Irumporai May 13, 2022 02:19 AM GMT
Report

வங்ககடலில் நிலவும் அசானி புயல் வலுவிழந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தொடர்ந்து மழை பெய்யும் எனவும்,இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் அறிவித்த தகவலின் படி:

சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,விழுப்புரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.