போட்றா வெடிய - ஆஸ்திரேலியவில் பிறந்தது புத்தாண்டு 2022

Australia newyear 2022 fireworks
5 மாதங்கள் முன்

உலகம் முழுவதும் 2022 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக உள்ளனர். இந்த நிலையில் உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. உலகின் நேரக்கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும்.

அந்த வகையில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த நிலையில் இந்திய நேரப்படி 5.30 மணிக்கு ரஷ்யா நட்டின் ஒரு சில பகுதிகளிலும், மாலை 6.30 மணிக்கு ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன், கான்பரா உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு பிறந்தது.

இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும், இரவு 11.30 மணிக்கு இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா தனது புத்தாண்டை வரவேற்கவுள்ளது.

அதற்கடுத்தபடியாக காலை 5.30 மணிக்கு இங்கிலாந்து நாட்டிலும், ஜனவரி காலை 9 மணி முதல் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை கொண்டாடவுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.