ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றம் : காரணம் என்ன?
ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் உள்ள 'முகல்' கார்டன் எனப்படும் புகழ் பெற்ற முகலாய தோட்டம் அம்ரித் உதயன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் மாற்றம்
சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாயர் தோட்டம் என அறியப்பட்டும் தோட்டத்திற்கு "அமிரித் உத்யன்" என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பெயர்சூட்டி உள்ளார்.

மக்களின் பார்வைக்கு திறந்துவைப்பு
இந்தத் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும். மேலும், இந்த முறை ஜன.31 முதல் மார்ச் 26 வரை இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும் என்றும் இவை தவிர, மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், பெண்களுக்காக சில நாட்கள் பிரத்யோகமாக ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது