பாராளுமன்றத்தில் குழந்தைக்கு தாய் பாலுாட்டிய எம்.பி - கைத்தட்டி உற்சாகப்படுத்திய ஆண் எம்.பிக்கள்
இத்தாலி பாராளுமன்றத்தில் அழுத தன் குழந்தைக்கு பெண் எம்.பி தாய் பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் பாலுாட்டிய பெண் எம்.பி
இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்தார்.
பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கைக்குழந்தை திடீரென அழுதுள்ளது. உடனே பாராளுமன்றம் அமைதியானது எனினும் குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.
குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்து கொண்டே எம்பி கில்டோ அங்கேயே தனது மகனுக்கு பாலுாட்டியுள்ளார்.

இதை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியேதோடு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைத்து கட்சிகளும் கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை.
ஃபெடரிகோவுக்கு நீண்ட நீண்ட சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம் என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெரோனி பதவியேற்றார். பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.