இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் இவர்கள்தான்- யாரெல்லாம் தெரியுமா?
கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியாகியுள்ளது.
கூகுள்
பிரபல தேடுதளமான கூகுள் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களால் பயன்படுத்தப்படுகிறது. எந்த சந்தேகம் எழுந்தாலும் உடனே கூகுளை நாடுவது தற்போது வழக்கமாகியுள்ளது.
அந்த வகையில் இந்த நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 2024 Google Rewind என்னும் பட்டியலை வெளியிடும். அதில் இந்த ஆண்டில் மக்களால் அதிகம் தேடப்பட்டவை பட்டியலிடப்பட்டிருக்கும். இம்முறை இந்தியர்களால் கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நபர்கள்
அதன்படி, இந்த பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், 3ஆவது இடத்தில் சிராக் பஸ்வானும் இடம்பிடித்துள்ளனர். கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அதேப் போன்று ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அதிக நபர்களால் தேடப்பட்டவையில் ஐபிஎல் தொடர் முதலிடத்திலும், டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டாவது இடத்திலும், 3ஆவது இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் உள்ளது.
From Thalapathy being the ✨ GOAT ✨ to listening to Husn & being a pookie 🎀 This year gave us many moments to cherish!
— Google India (@GoogleIndia) December 10, 2024
Make way for the top trending searches of 2024 🥁 #YearInSearch
🔗 https://t.co/JBA6Q1HYHG.