ஓயோவில் அதிகமாக ரூம் எடுத்து தங்குபவர்கள் இவங்கதான் - டேட்டாவில் வெளியான தகவல்!

India Telangana World
By Swetha Dec 26, 2024 07:00 AM GMT
Report

ஓயோ ரூமிற்கு அதிகமாக செல்பவர்கள் பற்றிய டேட்டா தகவல் வெளியாகியுள்ளது.

ஓயோ

இந்தியாவில் பல இடங்களில் ஹோட்டல் இருந்தாலும், OYO ஹோட்டல்கள் தனித்துவமாக பலரால் அறியப்பட்டது. மலிவான விலையில், பாதுக்காப்பாகவும், உடனே ரூம்கள் கிடைக்கும் என்பதால் அதிகமானோர் இதனை பயன்படுத்த தொடங்கினர்.

ஓயோவில் அதிகமாக ரூம் எடுத்து தங்குபவர்கள் இவங்கதான் - டேட்டாவில் வெளியான தகவல்! | The Most Oyo Room Booking State In India

குறிப்பாக இளைஞர்கள் ஓயோவில் காதலியுடன் அறை எடுத்து தங்குவதால் இந்த ஒயோ ஹோட்டல் பிரபலமடைந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் பிரபலமடைந்து வரும் Oyo, Travelopedia 2024 என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், நாட்டிலேயே ஓயோ ஆப் மூலம் அதிக எண்ணிக்கையில் அறைகளை முன்பதிவு செய்பவர்கள் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தானாம். அடுத்தபடியாக மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தெலுங்கானாவில் கூட ஹைதராபாத்தில் இருந்தே பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மற்றொரு சிறப்பு. அதனால் நகரங்களின் பட்டியலில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது.

பிரபல OYO ஹோட்டலில் ரகசிய கேமரா - நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்டி மிரட்டிய 4 பேர் கைது - அதிர்ச்சி சம்பவம்...!

பிரபல OYO ஹோட்டலில் ரகசிய கேமரா - நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்டி மிரட்டிய 4 பேர் கைது - அதிர்ச்சி சம்பவம்...!

தகவல்

அதை தொடர்ந்து, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. ஹைதராபாத்தில் அதிகமானோர் ஓயோ அறைகளை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது, ஹைதராபாத் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஓயோவில் அதிகமாக ரூம் எடுத்து தங்குபவர்கள் இவங்கதான் - டேட்டாவில் வெளியான தகவல்! | The Most Oyo Room Booking State In India

எனவே உலகத்தில் பல பேர் வருவதுண்டு. அப்படி இங்கு வருவோர் பெரும்பாலும் ஓயோ ஆப் மூலம் அறைகளை தேர்வு செய்து வருகின்றனர். அவ்வப்போது ஓயோ அறைகளில் அநாகரீகமான செயல்கள் நடப்பதாக வதந்திகள் பரவியது.

எனினும், OYOஅடிக்கடி இதுபோன்ற செய்திகளை மறுத்துள்ளது. அனைத்து வகையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஓயோவில் காதலியுடன் இளைஞர்கள் அறையெடுத்து தங்குபவர்கள் அடையாள அட்டையை கட்டாயமாக காட்ட வேண்டும்.

அதாவது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை. அதில் அவர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளதா என்று சரிபார்க்கப்படுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் திருமணம் செய்யாவிட்டாலும் இந்தியாவில் அறையை பதிவு செய்ய உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு இந்த உரிமையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.