காதுக்கு கீழே நரம்பில்..? அஜித்துக்கு இது தான் பிரச்சனை - மேலாளர் விளக்கம்

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அஜித் குமார்
மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் நேற்று அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எந்த காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல்கள் சரியாக வெளிவராத நிலையில், இது குறித்து பல்வேறு கருத்துக்களும் தொடர்ந்து வெளிவந்தன.
காதுக்கு கீழே...
இந்நிலையில், தான் அஜித்குமாரின் மேலாளர் சுகேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.
நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்து, நேற்றிரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இன்று இரவு அல்லது நாளை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.