டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம்..!

Delhi Mask Forced
By Thahir Apr 20, 2022 07:54 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் பொதுஇடங்களில் முகக் கவசம் கட்டாயமாகிறது.

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் 100க்குள் பதிவான தினசரி கொரோனா தொற்று நேற்று சுமார் 700ஐ நெருங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக் கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி மாநில அரசு மீண்டும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.