இந்தியாவுக்காக தங்கம் வென்றவர் காய்கறி விற்கும் அவலம்
இந்தியாவுக்கு 4 தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் தற்போது பிழைப்புக்காக காய்கறி விற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அமர்தீப்குமார்(வயது 29), சர்வதேச அளவில் எறிபந்து போட்டியில் இந்தியாவுக்காக 4 தங்க பதக்கங்களை வென்றவர்.
தற்போது வறுமையின் காரணமாக காய்கறி விற்றும், வாடகை கார் ஓட்டியும் பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவர் வாங்கிய தங்க பதக்கங்களை சிறிய கடையில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.
வெற்றி பெற்ற வீரருக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததே இதற்கு காரணம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அரசு வேலை வாய்ப்போ, நிதியுதவியோ கிடைத்திருக்க வேண்டும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
