அடுக்கு மொழி வசனங்களால் அவையினை கட்டிப் போட்ட வித்தகர்!
கலைஞர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரின் அரசியல் வசனங்கள் தான். அவரது திரைவெற்றிப் பற்றி நாம் கூறவாவேண்டும்.
அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்...' என்பது, இதுவரை திரையில் தீட்டப்பட்ட துணிச்சல் வசனங்களில் தலையாயது.
பொறுத்தது போதும்... பொங்கியெழு மனோகரா' என்ற வசனம், இது வரை தமிழ் சினிமாவில் சொல்லபடாதா பஞ்ச்.
வசந்தசேனை! வட்டமிடும் கழுகு...' வசனமெல்லாம், வெறித்தனம் இவ்வாறு திரையில் தனது எழுத்தால் தெறிக்க விட்ட கலைஞர் பொது வாழ்விலும் தனது வசனங்களால் செதுக்கியிருப்பார்.
அப்படி சில சுவாரசிய சம்பவங்கள் இதோ:
மூச்சினை விடமாட்டேன்:
கலைஞர் ஒருமுறைமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டபோது அவரை பரிசோதித்த டாக்டர் மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க என கூற அதற்கு கலைஞர் சொன்னாராம் மூச்சை விடக்கூடதுன்னுதானே டாக்டர் நான் உங்கள்ட்ட வந்திருக்கேன் என்று கூறினாராம்.
கண்ணாதாசனை கலாய்த்த கலைஞர்:
கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கலைஞர் அவரிடம் இந்த முறை தேர்தலில் எங்கே நிற்கப் போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு கண்ணதாசன் எந்தத் தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிடுகிறீர்கள்.
ஆகவே நான் இந்தத் தடவை தமிழ்நாட்டில் நிற்கப் போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்” என்று கூற.
கலைஞர் சிரித்தபடியே கூறினாரம் பாண்டிச்சேரியில் உன்னால நிற்க முடியாதேய்யா! என கூற அர்த்தம் புரிந்த கண்ணதாசன் வெடிப்புற சிரித்தாரம்.
ஆபாச புத்தக விவகாரம்:
ஒரு முறை சட்டப்பேரவையில் சோனையா என்பவர் தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டதற்காக, எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது யார் யார் என்கிற விவரத்தை தெரிந்த்துகொள்ள விரும்புகிறேன்!’’ என்று கேள்வி எழுப்பினார் .
அதற்கு கருணாநிதி பதில் சொன்னார்: ’தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டதற்காக, பல பேர்மீது வழக்கு போடப்பட்டு உள்ளது.
அந்த விவரங்களை எல்லாம் விளக்கமாகக் கூறி, சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே அந்த ஆபாசப் படங்களை வாங்கிப் பார்க்க வேண்டும், ஆபாசப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்ட விரும்பவில்லை!’’ என்றார்
டி.ஆர்.பாலு கிழித்த அரசியல்:
ஒரு முறை கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு மூன்று பேரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் ஏறி உட்கார்ந்தபோது வைரமுத்துவின் ஜிப்பா மேல் டி.ஆர்.பாலு உட்கார்ந்துவிட்டார்.
இது இருவருக்குமே தெரியாது. இறங்கும்போது வைரமுத்துவின் ஜிப்பா சிறிது கிழிந்துவிட்டதாம். அதை பார்த்த கருணாநிதி அடித்த கமெண்ட் இது:
‘’மத்திய மந்திரி டி.ஆர்.பாலு என்னத்த கிழிச்சார்னு இனிமே யாரும் கேள்வி கேட்க முடியாது என நகைச்சுவையாக கூறினார்.
அயிரை மீன் அளவுக்கு பேசுங்க:
சட்ட சபையில் மீன் வளத்துறையை பற்றிய ஒரு விவாதத்தில் அந்தத் துறையைச் சேர்ந்த அமைச்சர் எழுந்து பேச ஆரம்பித்தார்
. மீன் வளத் துறை அமைச்சரின் பேச்சில் கருணாநிதியை புகழ்ந்து பேச கருணாநிதியிடம் இருந்து ஒரு துண்டு சீட்டு அந்த அமைச்சருக்கு வந்தது.
அதில் கருணாநிதி எழுதியிருந்தது இதுதான் அயிரை மீன் அளவுக்குப் பேசவும்.
கோர்ட்டுக்கு குற்றவாளிகள்தான் வர வேண்டுமா:
தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே.. என்று பேசிக் கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி.
கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்றார் கருணாநிதி.
தங்க சீப்பு:
தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன்? நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார்.
அதற்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி உடனே எழுந்து ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்றார்.
இவ்வாறு திரையில் மட்டும் அல்லாது பொது வாழ்விலும் தனது வார்த்தை ஜாலங்கள் மூலம் பதில் கொடுத்தவர். கருணாநிதி .
என் உயரம் எனக்குத் தெரியும்:
கலைஞர் ,அடிப்படையில் சாகசகாரர் என்றே கூறலாம் அதற்கு சான்றாக கமலாலயம் குளத்தை நீந்திக்கடந்த கதை, அதைச் சொல்லும்.
ஆனாலும், தன் பலம் எது, பலவீனம் எது என்பதை, நன்றாகவே அறிந்தவர். அதனால்தான், அவர் படங்களில் நடிக்கவில்லை. `என் உயரம் எனக்குத் தெரியும்' என்று சொல்லிய, ஒரே அரசியல்வாதியும் அவர்தான்.
அதனால் தான் அத்தனை தேசியத் தலைவர்கள், காவேரி மருத்துவமனையில் முகாம் கொண்டார்கள்.
எப்போதும் பொது வெளிக்கு வராத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரே நேரில் வந்தார்.
எடப்பாடியே `தலைவர் கலைஞர்' என்றார். குருமூர்த்தியே `அவர் ஆள வேண்டும்' என்றார்.
எவரிடமும் எங்கும் பணியாத மம்தா நான் தமிழக முதல்வரிடம் வேண்டுகிறேன். கருணாநிதிக்கு இடமளியுங்கள்’ என்றார்.
கலைஞர் கருணாநிதியைப் பழிப்போர், பழிக்கட்டும். அதற்கான பதிலை அப்போதே பராசக்தி காலத்திலேயே கொடுத்து விட்டார். ஏன் என்றால் அவர் கலைஞர்.