3 வருஷமா என்ன பண்ணீங்க?'' சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

sivakarthikeyan madrashighcourt
By Irumporai Apr 07, 2022 08:04 AM GMT
Report

சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு ஏதும் தொடராமல் அமைதி காத்தது ஏன் என சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி வருமானத்துறை வழக்கை மறைத்து சிவகார்த்திகேயன் மற்றொரு மனுதாக்கல் செய்தது ஏன் என்றும் உயர்நீதிமன்றம் கேள்விகளை அடுக்கியுள்ளது.TDS தொகையை வருமான வரித்துறை வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஏன்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

சம்பளபாக்கி தொடர்பாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 13க்கு ஒத்திவைத்தது.  முன்னதாக, தயாரிப்பாளர் ஞானவேல்ராவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சம்பள பாக்கி ரூ. 4 கோடியை தர உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் தனது மனுவில் தெரிவித்திருந்தார். மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததிற்காக பேசப்பட்ட ரூ. 15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடி மட்டுமே ஞானவேல்ராஜா வழங்கியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மே 2019ல் வெளியானது.

ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை என்று கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.