சிம்மம் ராசிக்கு நன்மைகளை அள்ளி தரும் குருபெயர்ச்சி

2021 Zodiac Lion Kurupeyarcci
By Thahir Nov 16, 2021 11:12 PM GMT
Report

மகர ராசியின் அவிட்டம் நட்சத்திரம் 2ஆம் பாகத்தில் இருந்து கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் பகுதிக்கு குரு பெயர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த குருப்பெயர்ச்சியால் சிம்மம் ராசிக்கு என்ன விதமான நன்மைகளை செய்யப்போகிறார் என்பதை பார்க்கலாம்.

சிம்மம் ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதி பகைப்படாமல் இருந்தால் உங்க சுய ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் உயர் அரசியல் பதவிகளை வகிப்பதற்கான வாய்புகள் உள்ளன.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை சிம்ம ராசிகாரர்கள் எந்த தொழில் செய்தாலும் நீங்களே முதலிடம் வகிப்பீர்கள்.யாரிடமும் எதையும் வெள்ளந்தியாக பேசும் நீங்கள் வெறுப்புகளுக்கும் ஆளாக கூடும்.

உங்கள் ராசியில் 6ஆம் வீட்டில் இருந்து வந்த குரு பகவான் தற்போது நடந்த குருப்பெயர்ச்சியால் 7ஆம் வீட்டிற்கு வருகிறார்.

6ஆம் வீட்டில் இருந்த குரு பகவானால் உடல் நலம் பாதிப்பு, மனச்சோர்வு,குழப்பம்,நிம்மதியின்மை,மருத்துவமனை செலவுகள்,செய் தொழில் முடக்கம்,வருமானத்தடை,போட்டியாளர்கள் தொல்லை,வரவுக்கு மீறிய செலவுகளால் மனச்சோர்வு உள்ளிட்ட இன்னல்களை சந்தித்து வந்து நீங்கள் தற்போது நடந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்வு சிறப்பாக அமைய உள்ளது.

6ல் இருந்து வந்த குரு பகவான் அளித்த தொந்தரவுகள் எல்லாம் போய் நன்மைகளை அளிக்க போகிறார்.

உங்கள் ராசியை குரு பகவான் 2 மற்றும் 3ஆம் வீடான லாப ஸ்தானத்தை பார்பதால் 2,5,7,ல் குரு பகவான் சஞ்சரிக்க இருப்பதால் இது உங்களுக்கு பொற்காலம் என்பது ஜோதிட விதி.

7 வீட்டுக்கு செல்லும் குரு பகவான் உங்கள் ராசியை பார்பதால் நிம்மதி அடைவீர்கள்,நன்மைகள் அதிகரிக்கும்,இல்லற வாழ்க்கையில் இன்பம் காண்பீர்கள்.

உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இனி நீங்கும்,முன்பு நீங்கள் சந்தித்த மோசமான நிலை மாறி தொட்டது எல்லாம் வெற்றியடையும்.

வேலை தேடி அழைந்தவர்களுக்கு குருப்பெயர்ச்சியால் வேலை கிட்டும்,புதிய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

பதுங்கி இருந்த நீங்கள் இந்த குருப்பெயர்ச்சியால் புலி போல் பாய்வீர்கள்,பண வரவு பல வழிகளில் வந்து சேரும்.

திருமணத்திற்காக காத்து கொண்டிருந்த பெண்களுக்கும்,ஆண்களுக்கும் திருமணம் நடக்கும்.வீடு கட்ட முயற்சி செய்தவர்கள் வீடு கட்டுவீர்கள்.

7ஆம் வீட்டுக்கு வரும் குரு பகவானால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.பொது வெளியில் உங்கள் மீதான மதிப்பும்,மரியாதையும் அதிகரிக்கும்.

உங்கள் செயல்களுக்கு பாராட்டும்,பெருமைகளும் தேடி வரும்.ஆடை,ஆபாரண சேர்க்கை உண்டாகும்.

லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பிரிந்து இருந்த காதலர்கள் ஒன்றினைவீர்கள்.ஒருதலை காதல் இருதலை காதலாக மாறும்.

குருவின் பார்வையால் துணிச்சல் அதிகரிக்கும்,எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உருவாகும்.

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்,நண்பர்கள் ஆதரவு மற்றும் தந்தைக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் சீராகும்.

சிந்தனை அதிகரிக்கும்,குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்காண வாய்ப்புகள் உண்டு . சொத்து வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

பகைவர்கள் எல்லாம் விலகி போவார்கள் உங்கள் ராசியில் ஆறு மாதம் இருக்கும் குரு பகவான் அள்ளி கொடுக்க போகிறார்.

வெற்றி உங்கள் வசப்படும் மற்ற ராசிகளில் குரு ஒரு வருடமும் உங்கள் ராசியில் 6 மாதமும் சஞ்சரிக்க போகிறார்.ஆகவே 6 மாதம் இருக்கும் குரு பகவான் மற்ற ராசிகளை காட்டிலும் நன்மைகளை அள்ளி கொடுக்க உள்ளார்.