கேலி, கிண்டலை எல்லாம் கண்டுகொள்ளாத லெஜண்ட் சரவணன்... நம்பர் 1 ட்ரெண்டிங் இவர்தான்..!
தி லெஜண்ட் படம் யூட்யூபில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது.
இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தலா, விவேக், சிங்கம்புலி, லிவிங்ஸ்டன், ராய் லட்சுமி, யாஷிகா ஆனந்த் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்தில் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ட்ரெய்லர் யூட்யூப்பில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதுவரை 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை கொண்டுள்ள படத்தின் ட்ரெய்லர் யூட்யூபில் ட்ரெண்டிங் நம்பர் 1 ஆக உள்ளது.
தன்னை கேலி, கிண்டல் செய்தவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இப்படி ஒரு சாதனையை சத்தமே இல்லாமல் லெஜண்ட் சரவணா படைத்துள்ளார்.