கோலாகலமாக நடக்கப்போகும் ‘தி லெஜண்ட்’ பட இசை வெளியீட்டு விழா - 10 முன்னணி நடிகைகள் பங்கேற்பு - தீயாய் பரவும் தகவல்
பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன், ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா ஹீரோயினாக நடிக்க, நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
ஏற்கெனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாடி வாசல்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாட்டை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா வரும் மே 29ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அப்போது, இப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட இருக்கிறது.
இந்நிலையில், இந்த விழாவில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டாளமே கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகைகள் ஊர்வசி ரத்தேலா, பூஜா ஹெக்டே. தமன்னா, ஹன்சிகா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், லட்சுமி ராய், டிம்பிள் ஹயாத்தி, ஸ்ரீலீலா, நுபுர் சானொன் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளன.
இத்தனை முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள இருப்பதால் இப்போதே ரசிகர்களிடையே இந்த விழா குறித்த எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
