வெற்றி பெறுமா இந்தியா? சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி போட்டி

Rohit Sharma Chennai Indian Cricket Team Australia Cricket Team
By Thahir Mar 22, 2023 05:13 AM GMT
Report

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று கடைசி போட்டியில் மோத உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி மும்பையில் நடந்தது அந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி பெறுமா இந்தியா? சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி போட்டி | The Last Match Between India And Australia

விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

வெற்றி பெறுமா இந்தியா? சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி போட்டி | The Last Match Between India And Australia

இந்த போட்டியில் இந்தியா அணி தொடரை கைப்பற்றினால் மட்டுமே தரவரிசை இந்தியா நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்கும் அவசியமாகும்.

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று நடைபெறும் போட்டியில் மோதும் உத்தேச பட்டியல்

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா:  மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர் அல்லது நாதன் எலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.