தி கேரளா ஸ்டோரி ஒரு கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது : ஆளுநர் ஆர்.என்.ரவி

BJP R. N. Ravi
By Irumporai May 22, 2023 03:46 AM GMT
Report

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

 தி கேரளா ஸ்டோரி

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி வெளியானது. சுதிப்தோ சென் இயக்கத்தில் ஆதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, தேவதர்சினி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் கேரளாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளதால் தமிழ்நாட்டில் சில திரையரங்குகளிலும் , மேற்கு வங்கத்திலும் தடை செய்யப்பட்டது. 

தி கேரளா ஸ்டோரி ஒரு கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது : ஆளுநர் ஆர்.என்.ரவி | The Kerala Story Says Tn Governor Ravi

ஆளுநர் கருத்து

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் நேற்று தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார். நுங்கப்பாக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்தார்.

இந்த படத்தை பார்த்த பின் கவர்னர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.