‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை பார்த்து கதறி அழுத மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங்
அனுபம் கேர், மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் கடந்த 11ம் தேதி ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார்.
இப்படம் அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடாக, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
1990களின் முற்பகுதியில் காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் அங்கிருந்த பண்டிட்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதை மையக் கருத்தாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, படக்குழுவினர்களுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார்.இந்தப் திரைப்படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தை பார்த்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பாராட்டு தெரிவித்ததோடு அல்லாமல், அம்மாநில போலீசாருக்கு இப்படத்தை பார்ப்பதற்காக விடுமுறையும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தை பார்த்து தான் அழுததாக மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்துள்ளார். இப்படம் வெளிவராவிட்டால், மக்களுக்கு உண்மைத் தெரிய வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
மற்ற மாநிலங்கள் இப்படத்திற்கு வரவேற்பு கொடுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் அவ்வளவாக பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.