சென்னையில் இன்று மாலை வெளியாகிறது 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' - அண்ணாமலை அறிவிப்பு..!

BJP TheKashmirFiles K.AnnamalaiAnnouced RohiniSilverScreens
By Thahir Mar 16, 2022 05:58 AM GMT
Report

சென்னையில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் இன்று பாஜக சார்பில் திரையிடப்பட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகியது.

இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இதனிடையே இந்த படம் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இன்று வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 16 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை ரோகினி சில்வர் ஸ்க்ரீன்ஸில் வெளியிட உள்ளது.

இதை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். “நமது தேச வரலாற்றின் இருண்ட காலத்தின் இந்த முக்கியமான திரைப்படம் நம் கவனத்திற்கு உரியது!” என்று அவர் தெரிவித்துள்ளார்.