Breaking; பிபிசி அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை
டெல்லியிலுள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமானவரித்த துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் சோதனை
டெல்லி டால்ஸ் டாய் மார்க் மற்றும் கஸ்துாரி காந்தி மார்க் ஆகிய இரண்டு முக்கிய பிரதான சாலை சந்திப்பில் அமைந்துள்ளது பிபிசி ஊடக அலுவலகம்.
இந்த அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு அனைத்து மொழிகளும் செய்திகள் ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை பிபிசி அலுவலகத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் ஊழியர்களின் மொபைல் போன்களை வாங்கி வைத்துக் கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் செய்திகள் வெளியிட முடியாமல் நிறுவனம் முடங்கியுள்ளது.
இதையடுத்து வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த போது அவரது பங்களிப்பு குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.