3 ஆண்டுகளுக்கு பிறகு படுக்கையறை காட்சியை வைத்து மிரட்டிய கணவன் - அதிர்ந்துபோன மனைவி
திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை கணவர் படுக்கையறை காட்சியை வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரி எனக் கூறி திருமணம்
ஈரோடு மாவட்டம் மொடச்சூரை சேர்ந்த லிவ்விங்ஸ்டன் ஜெயபால் (30) என்பவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் பொம்மப்பட்டியை சேர்ந்த அபிதா (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
லிவ்விங்ஸ்டன் ஜெயபால் திருமணத்தின் போது தான் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய அபிதாவின் குடும்பத்தார் லிவ்விங்ஸ்டன்னுக்கு ரூ.1 லட்சமும், 20 பவுன் நகையும் வரதட்சனையாக கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற முதுமொழிக்கு ஏற்ப தன் கணவர் மத்திய அரசு அதிகாரி இல்லை என்பது தெரியவந்துள்ளது.
படுக்கையறை காட்சியை வைத்து மிரட்டல்
இதனால் ஆத்திரம் அடைந்த அபிதா கணவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு லிவிங்க்ஸ்டன் நாம் இருவரும் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகளை வீடியோ கால் மூலம் பதிவு செய்துள்ளேன் என்றும், அதை ஏற்கனவே இருவர் பார்த்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்து போனார் அபிதா. அதை தொடர்ந்து என்னிடம் வேறு ஏதாவது கேள்வி கேட்டால் அந்த காட்சிகளை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
பின்னர் அபிதா கணவர் ஏமாற்றியது மட்டுமல்லாமல், படுக்கையறை காட்சியை கொண்டு மிரட்டுவதை இனியும் தாமதம் செய்தால் வாழ்க்கை சீரழிந்துவிடும் என கருதி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.