உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த நிலையில் பிரேமலதா என்ற வாக்காளர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவில் தவறான தகவல்தந்ததால் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு செல்லாது என வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
பிரேமலதா தாக்கல் செய்த மனுவினை நிராகரிக்க கோரி பதில் மனுவும் உதயநிதி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வழக்கினை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார், இந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ,சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட 2 வழக்குகளையும் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது, மேலும் உதயநிதியின் வெற்றி மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் - 400 பேர் பாதிப்பு: காரணத்தை வெளியிட்ட வைத்திய நிபுணர் மலரவன் IBC Tamil
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மீளப்பெறமுடியாத சமஷ்டி தீர்வு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை IBC Tamil