தெரிந்தது பிறை தொடங்கியது ரமலான் நோன்பு

ramadan ghazisalahuddin
By Irumporai Apr 03, 2022 05:19 AM GMT
Report

தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.

பொதுவாக,இஸ்லாமியர்களின் காலண்டரில் 9-வது மாதம் ரமலான் மாதமாகும்.இந்த ரமலான் மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்களுக்கு நோன்பு இருப்பர்.இதில் அதிகாலை நேர தொழுகைக்கு முன்பாக உணவு உண்ணப்படுகிறது.அதனை தொடர்ந்து மாலை 6 வரை நோன்பு நோற்பவர்கள் தண்ணீர் கூட பருகுவதில்லை.

இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை காஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.

இதன்காரணமாக,நாகூர் ஆண்டவர் தர்கா உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் ஏரளாமான இஸ்லாமியர்கள் பங்கேற்று நோன்பை தொடங்கியுள்ளனர்.30 நாட்களுக்கு இந்த நோன்பு கடைபிடிக்கப்பட்டு பின்னர் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.