நடிகர் தனுஷ் இப்படிப்பட்டவரா...கேள்வி எழுப்பும் வெளிநாட்டினர் - என்னாச்சு தெரியுமா?
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்ததற்கு பின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் தி கிரே மேன்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியானது. ரத்தக் கரையுடன் இருந்த தனுஷின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து அனைவரது கனத்தையும் ஈர்த்தனர்.
இவர்களின் இந்த ட்வீட்டர் பதிவு வெளிநாட்டினர் கவனத்தையும் ஈர்த்தது.இதையடுத்து அவர்கள் யார் இந்த தனுஷ் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
அதற்கு பதில் அளித்த அவரது ரசிகர்கள் அவரை பற்றி விளக்கி அவர் நடித்த படங்கள் பற்றியும் எடுத்து கூறியுள்ளனர்.
தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளதை பெருமையாக பேசி வரும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.தனுஷின் திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாவது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Ethirneechal: சூழ்ச்சியில் குணசேகரனையே தோற்கடித்த வீட்டு பெண்கள்... கதையில் எதிர்பாராத திருப்பம் Manithan
