லட்சக்கணக்கான சிவப்பு நிற நண்டுகளுக்கு இனப்பெருக்கம் செய்ய பாதை அமைத்து கொடுத்த அரசாங்கம்
ஆஸ்திரேலியாவில் சிவப்பு நிற நண்டுகளுக்கு அரசாங்கம் பாதை அமைத்து கொடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காடுகளில் வசிக்கும் சிவப்பு நிற நண்டுகள், இனப்பெருக்க காலத்தில் கடலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. பொதுவாக சிவப்பு நிற நண்டுகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.
சிவப்பு நிற நண்டுகள் தங்களின் இன்பெருக்கத்திற்காக கடலுக்கு இடம் பெயர்ந்து, அங்கு முட்டையிட்டு, மீண்டும் தனது வசிப்பிடமான காட்டிற்கு திரும்புவதை வழக்கமாக வைத்து வருகிறது.
அந்த வகையில் நண்டுகள் இடும் முட்டைகள் பாதி மீன் மற்றும் கடல் உயிரினங்களுக்கு உணவாக மாறிவிடுகிறது. மீதமுள்ள முட்டைகள் மட்டுமே குஞ்சு பொரித்து காட்டிற்குள செல்லும்.
தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் சிவப்பு நிற நண்டுகள் கடலை நோக்கி படையெடுத்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் லட்சக்கணக்கான நண்டுகள் இடம்பெயர்ந்து வருகிறது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு நண்டுகளின் பாதுகாப்பிற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நண்டுகள் இடம் பெயர்தலுக்காக பாதை அமைத்துள்ளது.
மேலும், ஏராளமான சிவப்பு நிற நண்டுகள் சாலையிலும் பயணிப்பதால் அங்கு சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரம் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு லட்சக்கணக்கான நண்டுகள் ஒரே நேரத்தில் அணிவகுத்து செல்கின்றனர்.