83 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் - ரசிகர்கள் வாழ்த்து!

Hollywood Movies Hollywood
By Vinothini May 31, 2023 09:43 AM GMT
Report

பிரபல நடிகர் தற்போது தந்தையாக போகும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகரான அல் பசினோ, தி காட் பாதர் படத்தில் நடித்ததின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்.

the-godfather-al-pacino-expecting-child-at-83

இவருக்கு தற்போது 83 வயதாகும் நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு தன் முன்னாள் காதலியான நடிப்பு பயிற்சியாளர் ஜான் டாரண்ட் மூலம் 33 வயதான ஜூலி மேரி என்கிற மகள் இருக்கிறார்.

மேலும் இன்னொரு முன்னாள் காதலியான நடிகை பெவர்லி டி ஆஞ்சலோ மூலம் 22 வயதான ஆண்டன் ஜேம்ஸ், ஒலிவியா ரோஸ் என்கிற இரட்டை பிள்ளைகள் உள்ளனர்.

ஆனால் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

4-ம் குழந்தை

இந்நிலையில், இவர் 29 வயதாகும் நூர் அல்பல்லா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் டேட்டிங் செய்யும் வீடியோ புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது.

the-godfather-al-pacino-expecting-child-at-83

இதனை தொடர்ந்து இவர்கள் காதலிப்பதாக பேசி வந்தனர். அனால், கொரோனா வைரஸ் பரவி வந்த சமயத்தில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது என்று தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது இவரது காதலி 8 மாதம் கர்பமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் இவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், காதலிப்பதற்கு மட்டும் அல்ல குழந்தைக்கு தந்தை ஆவதற்கும் வயது ஒரு தடை அல்ல என்று கூறி வருகின்றனர்.