சண்டையின் போது செல்போனை விழுங்கிய சிறுமி - அறுவை சிகிச்சைக்கு பின் அகற்றம்
சகோதரனுடன் ஏற்பட்ட சண்டையின் போது சிறுமி செல்போனை விழுங்கிய நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு வயிற்றில் இருந்த செல்போன் அகற்றப்பட்டது.
செல்போனை விழுங்கிய சிறுமி
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் சகோதரனுடன் எற்பட்ட சண்டையின் போது 18 வயது சிறுமி செல்போனை விழுங்கியுள்ளார்.
இதனால் அந்த சிறுமிக்கு கடும் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி குவாலியரில் உள்ள ஜெய்ரோக்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுமியின் வயிற்றில் இருந்த செல்போனை மருத்துவர்கள் அகற்றினர்.
இந்த நிலையில் சிறுமியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சகோதரனுடன் ஏற்பட்ட சண்டையின் போது சிறுமி செல்போனை விழுங்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.