சிறுமி கருமுட்டை விவகாரம் விசாரணை அறிக்கை தாக்கல் - அமைச்சர் விளக்கம்

Tamil nadu Ma. Subramanian
By Thahir Jul 14, 2022 07:22 AM GMT
Report

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சிறுமி கருமுட்டை விவகாரம் 

சென்னை, தேனாம்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சிறுமி கருமுட்டை விவகாரம் விசாரணை அறிக்கை தாக்கல் - அமைச்சர் விளக்கம் | The Girl Ovary Affair

அப்போது பேசிய அவர், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் .

4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது. விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் தரவில்லை.

அறிக்கையில் நிறைய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து 2 தனியார் மருத்துவமனைகள் நீக்கப்படும் என்றும்,

கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது.

ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்களை விளக்கவில்லை. இது அதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.