ரயிலில் பயங்கரமாக கத்திய இளம்பெண் - பதறியடித்து ஓடிய டிக்கெட் பரிசோதகர்கள்!

India Indian Railways Mumbai
By Thahir Jan 09, 2023 09:48 AM GMT
Report

ரயிலில் திடீரென இளம் பெண் ஒருவர் கத்தியதால் டிக்கெட் பரிசோதகர்கள் ஓடிச்சென்று அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயிலில் பயங்கரமாக கத்திய இளம் பெண் 

மும்பை நகரில் தினமும் படிப்பு மற்றும் வேலைக்காக புறநகர் ரயிலில் கல்லுாரி பெண்கள், வேலைக்கு செல்வோர் ஆகியோர் பயணிப்பது வழக்கம்.

இதனால், காலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், மத்திய ரயில்வேக்கு உட்பட்ட உள்ளூர் ரயிலில் பயணிகளிடம் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

the-girl-horror-on-the-train

அப்போது, ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர் திடீரென வலியால் சத்தமாக கத்தியுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட 2 டிக்கெட் பரிசோதகர்களும் உடனடியாக பதறிபோய் ஓடிச்சென்றுள்ளனர்.

அப்போது அங்குள்ள, நிலைமையை பார்த்த அவர்கள் இருவரும். உடனே, ரயிலில் உள்ள நிலமையைப்பற்றி மேலாளரிடம் தகவல் தெரிவித்து மருத்துவ உதவி கேட்டுள்ளனர்.

உயிரை காப்பாற்றிய டிக்கெட் பரிசோதகர்கள் 

ரயில் தானேவை நெருங்கியதும் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. நிலைமை சரியில்லாமல் இருந்த நிலையில், ரயில்வே போலீசார் மற்றும் பயணி ஒருவர் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

பின், அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஐரோலி பகுதியில் ரயிலில் ஏறிய அந்த இளம்பெண்ணின் பெயர் பிங்கி ராய். கஜ்ராத் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய அவர் படித்து கொண்டே, கன்சோலியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்த நிலையில், ரயிலில் அவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். தானே நகரில் இறங்கி அவர் வேற ரயிலுக்கு மாறி பயணிக்க வேண்டும் . ஆனால், அதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.

டிக்கெட் பரிசோதகர்களான தீபா வைத்யா மற்றும் ஜெயின் மார்செல்லா இருவரும் சரியான நேரத்தில் உதவியதற்காக பிங்கியின் தாயார், அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் இந்தியாவில் ஆண், பெண் வேறுபாடின்றியும் , வயது வித்தியாசமின்றியும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மாரடைப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.