பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!
Kallakurichi School Death
By Thahir
கள்ளக்குறிச்சி மாணவி உடலை இன்று காலை மாணவியின் பெற்றோர் பெற்றுக்கொண்ட நிலையில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து உறவின் முறைபடி மாணவியின் தாய்மாமன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து தாய் மற்றும் தந்தை கதறலுக்கு இடையே மாணவிக்கு இறுதி சடங்குகளை மாணவியின் உறவினர்கள் செய்தனர்.
தொடர்ந்து மாணவியின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் கணேசன்,மாவட்ட ஆட்சியர்,ஊர் பொதுமக்கள் மற்றும் பல அரசியல் கட்சி உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாணவியின் உடல் அடக்கம் செய்வதை அடுத்து 200க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.