மிரட்டும் ஒமைக்ரான் : தென் ஆப்பிரிக்காவில் பரவுவது நான்காவது அலையா ,வெளியான அதிர்ச்சி தகவல் ?

southafrica fourthwave Omicron
By Irumporai Dec 04, 2021 03:36 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டால் தென் ஆப்பிரிக்கா நான்காவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார்.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது  தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் , இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள 9 மாகாணங்களில் 7-ல் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக  அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கூறியுள்ளார்.

மிரட்டும் ஒமைக்ரான் : தென் ஆப்பிரிக்காவில் பரவுவது நான்காவது அலையா ,வெளியான அதிர்ச்சி தகவல் ? | The Fourth Wave In South Africa By Omega

மேலும், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாகவும்செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுதிய அவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே நான்காவது அலையை நிர்வகிக்க முடியும் என்றும் கூறினார்.