யாழ்பாணம் செல்லும் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்டி வதைக்கும் குளிர்
வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதற்கு மாறாக இரவில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இரவு 9 மணிக்கெல்லாம் பனி விழா தொடங்குகிறது. இதனால் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இந்த பனிமூட்டத்தினால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே செல்கின்றனர்.
விமானம் புறப்படுவதில் தாமதம்
பனி மூட்டத்தினால் விமானங்களும் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனிடையே சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பகல் 12.30 மணிக்கு விமானம் புறப்படும் என சென்னை விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.