'ஒன்னோட நடந்தா...' இளையராஜா இசையில் முதல்முறையாக பாடிய தனுஷ்...! வைரலாகும் வீடியோ...!
‘விடுதலை’ படத்தின் 'ஒன்னோட நடந்தா...' என்ற பாடலுக்கு இளையராஜா இசையில் முதல்முறையாக தனுஷ் பாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘விடுதலை' படம்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'விடுதலை' படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில், இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர், சூரி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.
2 பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விடுதலை படம் குறித்த அப்டேட் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் 'ஒன்னோட நடந்தா' என்ற பாடலை இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் முதல்முறையாக பாடியுள்ளார். வரும் 8ம் தேதி இப்பாடல் வெளியாக உள்ளது.
மேக்கிங் ப்ரொமோ வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இளையராஜா, தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் இப்பாடல் குறித்து ஜாலியாக பேசுகிறார்கள்.
'ஒன்னோட நடந்தா' என்ற பாடலை தனுஷ் பாட இளையராஜா இசையமைக்கிறார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், இளையராஜா இசையில் முதல் முறையாக தனுஷ் பாடியுள்ள இப்பாடலைக் கேட்க ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
The first single #Onnodanadandhaa from #Viduthalai part 1 releasing on Feb8th
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2023
? @ilaiyaraaja ⁰
?@dhanushkraja & #AnanyaBhat
✒️ #Suga
Promo from the recording session#Vetrimaaran @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/SjrJnXvC6K