இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் டிரா காரணம் என்ன?

ENGvIND draw Rain play
By Irumporai Aug 08, 2021 08:39 PM GMT
Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக ‘டிரா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வெற்றி பெற 157 மட்டுமே தேவைப்பட்டது. மழை காரணமக ஐந்தாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டியில் சுமார் இரண்டரை நாட்களுக்கு மேலாக மழையினால் ஆட்டம் வாஷ் அவுட்டானது.

மீதமிருந்த நாட்களில் இந்தியா இரண்டு இன்னிங்ஸிலும் இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது. தொடக்கம் முதலே இந்தியா இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ராகுல், ஜடேஜா, பும்ரா மற்றும் ஷமி ஆகிய இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ரூட் சிறப்பாக விளையாடினார். மழை காரணமாக இந்த ஆட்டத்தை இந்தியா இழந்துள்ளது. இன்னும் இந்த தொடரில் நான்கு போட்டிகள் உள்ளன.