வரும் 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

minister subramaniyan firstbooster jan10
By Irumporai Jan 08, 2022 04:50 AM GMT
Report

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் இரண்டும் ஒன்று சேர்ந்து மூன்றாம் அலையாக பரவி வருகிறது, நேற்று ஒரேநாளில் 8,981 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27லட்சத்து 76 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "எவரெஸ்ட் சிகரம் போல கொரோனா பரவுவதால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது எனக் கூறினார்.

மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் டோஸ் 92% செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 71சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் 35,46,000 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள் எனக் கூறினார்.