திருப்பத்தூரில் இன்று மாலையோடு இறுதிக் கட்ட பிரச்சாரம் நிறைவு - வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் மும்முரம்
திருப்பத்தூரில் இன்று மாலை 6 மணிக்குள் இறுதிக் கட்ட பிரச்சாரம் நிறைவு பெற இருப்பதால் தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்குள் நிறைவு பெறுவதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் பொருத்தவரையில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, ஆகிய 2 நகராட்சிகளிலும் அதேபோல் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட 1 பேரூராட்சிகளில் உள்ள சுமார் 69 வார்டுகளிலும் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரையில் ஆங்காங்கே கட்சி வேட்பாளர்கள் தலைவர்களின் வேடம் அணிந்தும் நூதன முறையிலும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
கடைசி நாளான இன்று திருப்பத்தூர் நகராட்சியில் 4 வார்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஐயப்பன் காலை முதலே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மாற்றுத்திறனாளி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது