பெற்ற மகள்களை எரித்து கொன்ற கொடூர தந்தை - பகீர் பின்னணி!
தந்தை, பெற்ற மகள்களை எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதை
கன்னியாகுமரி, பரசேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜன் - அனிதா தம்பதி. இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எலக்ட்ரிசனாக வேலைசெய்து வரும் கணவர் குடிபோதைக்கு அடிமையானதால் மனைவி அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அனிதா திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆர்டர் வந்ததால் வீட்டிற்கு வர தாமதமாகியுள்ளது. இந்நிலையில், போதையில் வீட்டிற்கு வந்த கணவன் மனைவி வீட்டில் இல்லாத நிலையில் குழந்தைகள் கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
எரித்து கொலை
பின் மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் வீட்டை பூட்டிவிட்டு 2 குழந்தைகள் மீதும் துணிகளை போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளார். தொடர்ந்து தானும் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துள்ளார்.
இதில் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் நாகராஜன் உடல் கருகி உயிரிழந்துள்ளார். குழந்தைகள் உடல் கருகி உயிருக்கு போராடிய நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.