‘’எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி'’ - உடல் ஊனம் இருந்தாலும் கின்னஸ் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி
ஒரு மனிதன் தனது திறமையினை வெளிகாட்ட உடல் ஊனம் ஒரு தடை அல்ல என நிரூபித்து காட்டி விட்டார் மாற்றுத் திறனாளி ஒருவர். உ அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த சியோன் கிளார்க் (Zion Clark). இவர் 4.78 செகண்டில் 20 மீட்டர் வரை தனது கைகளால் நடந்து சாதனை படைத்துள்ளார்.
தனது இரு கால்களை இழந்தாலும் தனது தன்னம்பிக்கையால் உடலின் மேல் பாகங்களை மட்டும் வைத்து சாதனை படைத்துள்ளார். சியோன் கிளார்க் மேலும் சியோன் ஒரு மல்யுத்த வீரர் மற்றும் சக்கர நாற்காலி பந்தய வீரர். சியோனின் குறிக்கோள், 2024ல் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தய விளையாட்டுகள் இரண்டிலும் பங்கேற்கும் முதல் அமெரிக்க தடகள வீரராக வேண்டும் என்பதே என அவரே தெரிவித்துள்ளார்.
[
இந்த நிலையில் சியோன் கிளார்க் -ன் வீடியோ இதுவரை யூடியூபில் பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.