Friday, Jul 25, 2025

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு..!

COVID-19
By Thahir 3 years ago
Report

இந்தியாவில் மேலும் 2,527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தொற்றின் 4-வது அலை பரவல் தொடங்கி விட்டதா என்ற அளவில் பல்வேறு மாநிலங்களில் சீரான அளவில் தொற்று உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15079 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,656 பேர் குணம் அடைந்துள்ளனர்.

குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 068 -ல் இருந்து 4 கோடி 25 லட்சத்து 17 ஆயிரத்து 724 - ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இது வரை 187,46 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.56 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.