நுரையீரல் செயலிழப்பால் பிரபல நடிகர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்
Mumbai
Death
By Thahir
பிரபல இந்தி நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி உடல்நலக்குறைவால் காலமானார்.இவருக்கு வயது 73.
நடிகர் ஜாவேத் கான் உயிரிழப்பு
துார்தர்ஷனில் ஒளிப்பரப்பான நகைச்சுவை தொடரில் நடித்து பிரபலமானவர் ஜாவேத் கான் அம்ரோஹி. அதன் பின்னர் லகான், சக்தே இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடைசியாக 2020 ஆம் ஆண்டு வெளியான சதக் 2 படத்தில் நடித்திருந்தார். இந்திய மக்கள் திரையரங்க அமைப்பின் உறுப்பினராக இருந்த ஜாவேத் கான், நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து மும்பை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நுரையீரல் செயலிழந்ததால் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.