பாசிஸ்ட்களின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியிருக்கிறது - உதயநிதி ஸ்டாலின்..!
கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாசிஸ்ட்களின் வீழ்ச்சி தெற்கிலிருந்து உதயமாகியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்
நேற்று கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்தது. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்
இந்த நிலையில், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் “கர்நாடகா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்க உள்ள காங்கிஸ் கட்சிக்கு என் வாழ்த்துகள்.

சர்வாதிகாரம், மதவாதம், மக்களைச் சுரண்டும் ஊழல் என்று இருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்களின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கி உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள @INCIndia பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் - மதவாதம் - மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத்…
— Udhay (@Udhaystalin) May 13, 2023