சென்னை கடற்கரைக்கு சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

By Irumporai Apr 24, 2022 11:42 AM GMT
Report

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடை மீதி ஏறியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலின் பிரேக் பிடிக்காமல் போனதால் தடம்புரண்ட மின்சார ரயில் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் இருந்து நடைமேடை மீது ஏறியிருக்கிறது.

இதனால் முதல் பெட்டி பாதிக்கு மேல் நடைமேடை மீதி ஏறியதில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. அதேச்சமயம் ரயிலில் வேறு எவரும் இல்லாததால் உயிர் சேதவும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை கடற்கரைக்கு சென்ற மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து | The Electric Train Chennai Beach Crashed

. இதனையடுத்து காயமுற்ற ரயில் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்துள்ள ரயில்வே போலிஸார், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இத்தகைய விபத்து நடந்தது அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் தொற்றிக்கொண்டுள்ளது.