இலங்கையில் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதார நிலைமை மோசமாகும் - மத்திய வங்கி ஆளுநர்..!
நாட்டில் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதார நிலைமை மோசமாகும் என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது.
இதையடுத்து அரசுக்கு எதிராகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக கோரி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச திங்கட்கிழமை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த அன்றே அவரது ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்க முயன்றதால் பெரும் கலவரம் வெடித்தது.
இதையடுத்த மகிந்த ராஜபக்ச வீடு போராட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் தலைமறைவானார்.
இந்நிலையில் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக மோசமடையும் என்றார்.
ஒரு வாரத்திற்குள் அரசியல் ஸ்திரதன்மையை உறுதிபடுத்தாப்பட்டால் தான் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
நாடு தொடர்ந்து வீழ்ச்சி பாதையிலேயே பயணித்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.