இதுவே என் கடைசி நாள்...உன்னை இயக்க முடியாது - பேருந்தை கட்டியணைத்து அழுத ஓட்டுநர்
ஓய்வு பெறும் நாளில் பேருந்தை கட்டியணைத்து முத்தமிட்டு ஓய்வுபெற்ற ஓட்டுநரின் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடைசி நாளில் கட்டியணைத்து அழுத ஓட்டுநர்
மதுரை அரசுப் போக்குவரத்து கழக திருப்பரங்குன்றம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் பைக்காராவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி.
இவர் 30 ஆண்டுகளாக பணியாற்றிய ஓட்டுநர் முத்துப்பாண்டி 60 வயது நிரம்பிய நிலையில் பணி ஓய்வு பெற்றார்.
முத்துப்பாண்டி திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து வழித்தட எண் 31 A பேருந்தை இயக்கினார்.
இன்று காலையுடன் அவருக்கு பணி முடிந்த நிலையில் தான் இத்தனை ஆண்டுகளாக ஓட்டி வந்த அரசு பேருந்தை இன்று காலை கடைசியாக இயக்கி ஓய்வு பெற்றார்.
அப்போது அதனை வணங்கி முத்தமிட்டு அரசுப் பேருந்தை கட்டித் தழுவினார். கண்ணீர் ததும்ப அரசுப் பேருந்து மூலம் தன் வாழ்வில் பெற்ற பயன்களை எடுத்துக் கூறி மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதாக அவர் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Last working day of a government TNSTC bus driver. He would have transported lakhs of passengers safely through countless journeys, rain or shine ? pic.twitter.com/pVvUFHx9dk
— Thinakaran Rajamani (@thinak_) June 1, 2023